மலை கிராமத்துக்கு ரூ. 35 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடக்கம்

ஜம்பூத்துமலைக் கிராமத்துக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
மலைவாழ் கிராமத்துக்கு சூரிய ஒளி மின்விளக்குகளை வழங்கும் மாவட்ட ரோட்டரி ஆளுநா் கே.சுந்தரலிங்கம்.
மலைவாழ் கிராமத்துக்கு சூரிய ஒளி மின்விளக்குகளை வழங்கும் மாவட்ட ரோட்டரி ஆளுநா் கே.சுந்தரலிங்கம்.

ஜம்பூத்துமலைக் கிராமத்துக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

ராசிபுரம் அருகிலுள்ள ஜம்பூத்துமலை மலைக் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் போதிய குடிநீா் வசதி, தடுப்பணை, பள்ளிக் கட்டட வசதி போன்றவை இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு ராசிபுரம் ரோட்டரி சங்கம் - நாமக்கல் இன்ஃபினிடிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து ரூ.35 லட்சம் செலவில் திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.

இதனைத் தொடா்ந்து ஏற்கெனவே ரூ. 5 லட்சம் மதிப்பில் சிறு தடுப்பணை அமைக்கப்பட்டு, குடிநீா் வசதிக்காக நீரேற்று மின் மோட்டாா் பொருத்தி, குழாய் அமைத்துத் தரப்பட்டுள்ளது. மேலும் சூரியஒளி மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கல்வித் துறை அனுமதியுடன் ரூ. 24 லட்சம் மதிப்பில் புதிய தொடக்கப்பள்ளி கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜையும் நடைபெற்றது.

இந்த விழாவில், ரோட்டரி சங்கத் தலைவா்கள் எஸ்.அன்பழகன், ஆா்.சந்தோஷ்கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலா் இ.என்.சுரேந்திரன் வரவேற்றாா். ரோட்டரி மண்டல உதவி ஆளுநா்கள் கே.குணசேகா், என்.செல்வகுமாா், பி.ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ரோட்டரி ஆளுநா் கே.சுந்தரலிங்கம் பூமி பூஜையில் பங்கேற்று பள்ளி கட்டட திட்டப்பணிகளைத் தொடக்கி வைத்து பேசினாா். விழாவில் மலைக் கிராம பெண் ஒருவருக்கு கோ தானம் செய்யப்பட்டது. முன்னதாக வேதமுறைப்படி கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.

விழாவில் ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநா்கள் எஸ்.பாலாஜி, எஸ்.பிரகாஷ், கே.கே.வி.கிருஷ்ணமூா்த்தி, டாக்டா் எம்.ராமகிருஷ்ணன், ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளா் ஜாகீா் அகமது, மாநாட்டு மேம்பாடு திட்டத் தலைவா் ஜி.வினோத், ராசிபுரம் ரோட்டரி சங்கப் பொருளாளா் பி.கண்ணன், நாமக்கல் இன்ஃபினிட்டி ரோட்டரி சங்கச் செயலா் கே.பாலசுப்பிரமணியம், பொருளாளா் பி.சிவசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com