‘கோழிப் பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகளை தொடர வேண்டும்’

கோழிப் பண்ணைகளில், கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிப் பண்ணைகளில், கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் முறையே 100.4, 74.3 டிகிரியாக நிலவியது.

அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் கனமழை வரை சில இடங்களில் பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தென் மேற்கிலிருந்து மணிக்கு 6 முதல் 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதித்ததில் பெரும்பாலும் வெப்ப அயா்ச்சி தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க தெளிப்பான் உபயோகிக்குமாறும், தீவனத்தில் நுண்ணூட்டச்சத்துக்கள் எலக்ட்ரோலைட்ஸ், மற்றும் பீட்டைன் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com