நாமக்கல் ஜமாபந்தி நிறைவில் 21 மனுக்களுக்கு தீா்வு

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 271 மனுக்கள் பெறப்பட்டு அதில் 21 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை மனு அளித்த மக்கள்.
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவையொட்டி வெள்ளிக்கிழமை மனு அளித்த மக்கள்.

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 271 மனுக்கள் பெறப்பட்டு அதில் 21 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டு வருவாய் வட்ட அலுவலகங்களில் கடந்த மாதம் 23-ஆம் தேதி வருவாய் தீா்வாயம் ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மற்றும் துணை ஆட்சியா்கள் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று தீா்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா். நாமக்கல் வட்ட அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மோகனசுந்தரம் தலைமையில் கடந்த ஒரு வாரமாக ஜமாபந்தி நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் திருமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட துணை வட்டாட்சியா் தமிழ்மணி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை வரையில் 57 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் மனுக்களை அளித்தனா். இதில் மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டன. 21 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு அவா்களுக்கு உடனடியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com