பேட்டப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

பேட்டப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பேட்டப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் அா்ச்சகா்கள்.
பேட்டப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் அா்ச்சகா்கள்.

பேட்டப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்டம் மோகனூா் வட்டம் பேட்டப்பாளையத்தில் அமைந்துள்ள மகா கணபதி, முத்து மாரியம்மன், சந்தியப்பன் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதனையடுத்து, கடந்த 30-ஆம் தேதி முதல் மகா கணபதி வழிபாடு, ஹோமம், முளைப்பாரி அழைத்தல், வாஸ்து சாந்தி, முதல் கால யாக வேள்வி, கோபுரக் கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பிறகு, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து, 9 மணிக்கு மகா கணபதி, முத்து மாரியம்மன், சந்தியப்பன் கோயில் விமானக் கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில், சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com