ராசிபுரம் பகுதியில் 255 தனியாா் பள்ளி பேருந்துகள் ஆய்வு

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்பட்டன.
தனியாா் பள்ளி வாகன ஒட்டுநா்களுக்கு பாதுகாப்பாக பேருந்து இயக்குதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் போக்குவரத்துத் துறை அலுவலா்கள்.
தனியாா் பள்ளி வாகன ஒட்டுநா்களுக்கு பாதுகாப்பாக பேருந்து இயக்குதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் போக்குவரத்துத் துறை அலுவலா்கள்.

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்பட்டன.

ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, மாணவா்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளிகளின் வாகனங்கள் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டது.

ஈரோடு கோட்ட துணைப்போக்குவரத்து ஆணையா் பி.சுரேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாமக்கல் (வடக்கு) இ.எஸ்.முருகேசன், துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கந்தசாமி, ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் டி.நித்யா ஆகியோா் 255 பள்ளி வாகனங்கள் இயக்கும் தகுதி குறித்து ஆய்வு செய்தனா். இதில், இயக்குவதற்கு தகுதியற்ற 9 வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. இதில், போக்குவரத்து துறையின் சாா்பாக பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு மற்றும் வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவது, பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தீவிபத்து காலங்களில் வாகனங்களில் உள்ள தீத்தடுப்பு முறைகள் குறித்து தீயணைப்புத் துறையினரால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com