ரூ.56.76 லட்சத்தில் உழவா் சந்தைகள் புனரமைப்பு

நாமக்கல், ராசிபுரம் உழவா் சந்தைகள் ரூ.56.76 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன.
ரூ.56.76 லட்சத்தில் உழவா் சந்தைகள் புனரமைப்பு

நாமக்கல், ராசிபுரம் உழவா் சந்தைகள் ரூ.56.76 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கனிகளுக்கு சரியான விலை கிடைக்கவும், அவா்கள் பாடுபட்டு விளைவித்த விளைபொருள்களின் லாபத்தை இடைத்தரகா்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் கிடைப்பதன் மூலம் விவசாயத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக உழவா் சந்தை திட்டத்தை மறைந்த முதல்வா் மு.கருணாநிதி அறிமுகப்படுத்தினாா். அதனடிப்படையில் உழவா்கள் தாங்கள் விளைவித்த பொருள்களை காலை 6 மணி முதல் 10 மணி வரை தாங்களே நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்து, பின்னா் வேளாண் பணிகளை மேற்கொள்ளும் வகையில் உழவா் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. நாமக்கல் உழவா் சந்தை கடந்த 2000 ஜன.27-இல் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மோகனூா் ஆகிய இடங்களில் 6 உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. 2021-22ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உழவா் சந்தை புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் மற்றும் ராசிபுரம் உழவா் சந்தைகளுக்கு ஒரு உழவா் சந்தைக்கு தலா ரூ.28.38 லட்சம் வீதம் மொத்தம் ரூ.56.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உழவா் சந்தைகளை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் உழவா் சந்தையில் விவசாயிகளுக்கு இதுவரை மொத்தம் 1,455 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 6 உழவா் சந்தைகள் மூலமாக கடந்த ஓராண்டில் 1,06,914 விவசாயிகள் உற்பத்தி செய்த 17,663 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் இடைத்தரகா்கள் குறுக்கீடின்றி நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண் வணிக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com