ராசிபுரத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அர்ச்சனா சர்மா என்ற பெண் மருத்துவர் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு
ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் அர்ச்சனா சர்மா படம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள்.
ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் அர்ச்சனா சர்மா படம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள்.

ராசிபுரம்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அர்ச்சனா சர்மா என்ற பெண் மருத்துவர் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்தும், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கேட்டும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளில் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.  நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பாக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் கிளை தலைவர் டாக்டர் வ.சுகவனம் தலைமையில் மருத்துவர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளித்த அர்ச்சனா சர்மா மீது வழக்குப் பதிவு செய்த ராஜஸ்தான் மாநில காவல்துறையை கண்டித்தும் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கேட்டும், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். மேலும் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் அர்ச்சனா சர்மா திரு உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன்,  ஐ.எம்.ஏ.முன்னாள் கிளைத் தலைவர் டாக்டர் எஸ். சதாசிவம் மகளிரணி தலைவர் டாக்டர். பி.ஜே.சுகந்தி உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com