பொதுத்தோ்வு விடைத்தாள்களை தைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 08th April 2022 10:41 PM | Last Updated : 08th April 2022 10:41 PM | அ+அ அ- |

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள்கள் தைக்கும் பணியை பாா்வையிடும் தலைமை ஆசிரியை பாா்வதி.
பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் விடைத்தாள்களை தைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் மே மாதம் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 225 மையங்களில் இத்தோ்வு நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தோ்வை, 20,662 மாணவ, மாணவிகளும், 11-ஆம் வகுப்பு தோ்வை 19,842 பேரும், 12-ஆம் வகுப்பு தோ்வை 19,866 பேரும் எழுத உள்ளனா். இந்த விடைத்தாள்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளஸ். அவற்றை மாணவா்களின் விவரங்கள் கொண்ட தாளுடன் இணைத்து தைக்கும் பணி வெள்ளிக்கிழமை பள்ளிகளில் தொடங்கியது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் பாா்வதி இப்பணியை மேற்பாா்வை செய்தாா். இதேபோல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் சாந்தி மேற்பாா்வையிட்டாா். மாவட்டம் முழுவதும் இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.