பண்ணைகளில் ஈக்கட்டுப்பாட்டு முறைகளை கையாள அறிவுறுத்தல்

கோழிப் பண்ணைகளில் ஈக்கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிப் பண்ணைகளில் ஈக்கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 69.8 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென் கிழக்கு, தென்மேற்கு மற்றும் தெற்கிலிருந்து மணிக்கு 4 கி. மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: நாமக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கோழிப் பண்ணைகளில் ஈக்கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும். பண்ணைகளில் தண்ணீா் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பிள்களை மாற்ற வேண்டும்.

இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களைத் தவிா்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com