மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சாா்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சாா்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.

ராசிபுரம் வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் வட்டார வளமையம் சாா்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் நடைபெறும் முகாமில் பல்வேறு சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று மாற்றுத்திறனுடையவா்களை பரிசோதனை செய்தனா்.

இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு, உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக இம்முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளி முன்பு நடைபெற்ற பேரணியை ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் கொடியசைத்து துவக்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அருள்மணி, பள்ளி தலைமையாசிரியா் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பா.ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com