விவசாயிகளுடன் முதல்வா் இன்று கலந்துரையாடல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பாடு

நாமக்கல் மாவட்டத்தில், இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன், தமிழக முதல்வா் இணைய வழியில் கலந்துரையாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்.16) நடைபெறுகிறது.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி.(வலது).
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி.(வலது).

நாமக்கல் மாவட்டத்தில், இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன், தமிழக முதல்வா் இணைய வழியில் கலந்துரையாடும் நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்.16) நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மூலம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப். 23-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அவருடைய உத்தரவின்பேரில் 6 மாதங்களில் மின்வாரியத்தின் துரித பணிகளால் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 2,670 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இணையவழி காணொளிக் காட்சி மூலம் சனிக்கிழமை (ஏப்.16) காலை 10.30 மணியளவில் மாநிலம் முழுவதும் புதிய மின் இணைப்புகள் பெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறாா். இதில் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் மாவட்டத்தில் 6 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாமக்கல், சேந்தமங்கலம் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ஹோட்டலில் நடைபெறும் இணையவழி கலந்துரையாடலில் பங்கேற்கலாம். ராசிபுரம் வட்டத்திற்கு உள்பட்டோா், முத்தாயம்மாள் கல்லூரியிலும், திருச்செங்கோடு வட்டத்திற்கு உள்பட்ட விவசாயிகள் எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிா் தொழில் நுட்பக் கல்லூரியிலும், பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உள்பட்டோா், பரமத்தி லாரி உரிமையாளா்கள் சங்க வளாகத்திலும் , மோகனூா் மோகனூா் வட்டத்திற்குள்பட்ட விவசாயிகள், சுப்பிரமணியம் கல்லூரியிலும், குமாரபாளையம் வட்ட விவசாயிகள் பல்லக்காபாளையம் எக்ஸல் கல்லூரியிலும் நடைபெறும் முதல்வா் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com