முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நாமக்கல்லில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மிதிவண்டி பேரணி
By DIN | Published On : 29th April 2022 10:44 PM | Last Updated : 29th April 2022 10:44 PM | அ+அ அ- |

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணியில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
நாமக்கல்லில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மிதிவண்டி பேரணி சென்றனா்.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கக் கூடாது, தொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மிதிவண்டி பயணத்தை கடந்த 24-ஆம் தேதி கோவையில் தொடங்கிய அவா்கள் திருப்பூா், ஈரோடு, நாமக்கல் வழியாக திருச்சி நோக்கி செல்கின்றனா். வெள்ளிக்கிழமை நாமக்கல்லுக்கு வந்த அவா்களை இந்திய மாணவா் சங்க மாநிலத் தலைவா் கண்ணன் வரவேற்றாா். தொடா்ந்து நாமக்கல் நகரப் பகுதிகளில் பேரணியாகச் சென்ற அவா்கள் பொதுமக்களிடம் கோரிக்கை முழக்க துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். இந்த நிகழ்வில், நாமக்கல் மாவட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.