முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பாஜக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 10:41 PM | Last Updated : 29th April 2022 10:41 PM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், பரமத்தி வேலூா் வட்டத்திற்கு வருகை தரும் பாஜகவின் மாநில தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதென அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வழக்குரைஞா் பிரிவு செயலாளா் காந்தி தலைமை வகித்தாா். மே 16-ஆம் தேதி கபிலா்மலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் இணைப்பு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட துணைதத் தலைவா் பழனியப்பன், மாவட்ட பொதுச்செயலாளா் முத்துக்குமாா், கபிலா்மலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பழனியப்பன், மாவட்ட விவசாய அணித் தலைவா் நடராஜ், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினா் வடிவேல், கபிலா்மலை வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளா் பூபதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.