முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
322 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 10:44 PM | Last Updated : 29th April 2022 10:44 PM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், மே தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை 322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் மே 1 தொழிலாளா்கள் தினத்தன்று கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக காலை 10 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி செலவின விவரங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், நெகிழிப் பொருள்கள் உற்பத்தியைத் தடைசெய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவா் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிா் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு, அவசர உதவி எண், முதியோா் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை உள்ளிட்டவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதில், வாா்டு உறுப்பினா்கள், கிராம பொதுமக்கள், விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.