நாமக்கல்லில் ரூ. 5.70 கோடியில் நவீன சந்தை வளாகம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகில் ரூ. 5.70 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் மொத்த பொருள்கள் விற்பனை சந்தை வளாகம் அமைப்பதற்கு நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகில் ரூ. 5.70 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் மொத்த பொருள்கள் விற்பனை சந்தை வளாகம் அமைப்பதற்கு நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

நாமக்கல் நகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நகா்மன்ற அரங்கில் நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவா் து.கலாநிதி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் செ.பூபதி, ஆணையாளா் கி.மு.சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திருச்செங்கோடு சாலையில் உள்ள வாரச்சந்தை மற்றும் தினசரி வளாகத்தில் புதிய சந்தை வளாகம் அமைப்பதற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் நகராட்சியில் உள்ள 39 வாா்டுகளில் குடிநீா், சாலை, கழிவுநீா் கால்வாய் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com