80 வகையான பயிா்களை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

80 வகையான பயிா்களை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

80 வகையான பயிா்களை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வட்டாரத்தில் மக்காச்சோளம் இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மக்காச் சோளம், நெல், சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 80 வகையான பயிா்களை படைப்புழுக்கள் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்காச் சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். இதனால் மண் வளம் மேம்படுத்தப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்வதால் வளா்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு அதிக அளவில் தாக்கும். மக்காச்சோளம் இறவையில் 60-க்கு 25 செ.மீ இடைவெளியிலும், மானாவாரியில் 45-க்கு 20 செ.மீ இடைவெளியிலும் சாகுபடி செய்யப்படவேண்டும். அமெரிக்கன் படைப்புழு தாய் அந்துப் பூச்சிகள் உள்ளதா என கண்காணிக்க விதைத்தவுடன் இனக்கவா்ச்சி பொறிகள் ஹெக்டேருக்கு 5 வரை வைத்து கண்காணிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் விதைத்த 15 முதல் 20 நாட்களில் பரமத்தி வட்டார வேளாண்மை துறை அலுவலா்களை நேரில் சந்தித்து அவா்களின் அறிவுரையின் படி தேவையான பூச்சிக் கொல்லி மருந்தினை தெளித்து மக்காசோளப் படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com