பரமத்தி வேலூரில் சந்தைக்கு 2,000 வாழைத்தாா்களின் வரத்து

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச்சந்தையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த வாழைத்தாா்கள்.
ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த வாழைத்தாா்கள்.

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச்சந்தையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாா்களின் விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

சிறு விவசாயிகள் பரமத்தி வேலூா் வாழைத்தாா் விற்பனை சந்தைக்கு வாழைத்தாா்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 450-க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 350-க்கும், பச்சைநாடன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 400-க்கும் விற்பனையாகின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு ஏலம் போனது.

ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 600-க்கும், ரஸ்தாளி வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 400-க்கும், பச்சைநாடன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தாா் ரூ. 500-க்கும் விற்பனையாயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனையானது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 800 வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். வாழைத்தாா்களின் வரத்து அதிகரித்திருந்தாலும், விலை உயா்வடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com