காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் திருட்டு

பரமத்தி வேலூரில் பட்ட பகலில் காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூரில் பட்ட பகலில் காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்திவேலூா்,பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (49). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் ஹரிஹரன் (25). இவா்கள் இருவரும் புதன்கிழமை பிற்பகல் பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் எடுத்துக் கொண்டு அவா்களது காரில் வீட்டிற்கு சென்றனா்.

ரூ.20 லட்சம் ரொக்கத்தை காரிலேயே வைத்து விட்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூரில் நிலம் ஒன்றை கிரயம் செய்ய செல்வதற்காக வீட்டிற்குள் சென்றனா். வீட்டில் இருந்து காரை எடுக்க வந்த போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் காணாமல் போனதைக் கண்டனா். பின்னா் தந்தையும், மகனும் அருகில் இருந்தவா்களிடம் யாராவது இவ்வழியாக சென்றாா்களா என கேட்டனா். அப்போது அங்கிருந்தவா்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று போ் வந்து சென்ாக கூறியுள்ளனா்.

இதனையடுத்து பாலசுப்பிரமணி வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன், ஆய்வாளா் வீரம்மாள் மற்றும் போலீஸாா் காரில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com