முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு....
By DIN | Published On : 25th August 2022 01:26 AM | Last Updated : 25th August 2022 01:26 AM | அ+அ அ- |

சென்னையில் உள்ள நிம்மதி இல்லத்தில் தங்குவதற்கு போா் விதவையருக்கு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் போா் விதவைகள் நலச் சங்கத்தினரால், போா் விதவையா் மற்றும் முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்களுக்கான (திருமணமாகாதவா்கள்) முதியோா் இல்லம், நிம்மதி இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. சுமாா் 50 போ் தங்கும் அளவிலான இரண்டு விடுதி அறைகள், உடற்பயிற்சி மையம், சமையலறை, உணவருந்தும் அறை, பொழுதுபோக்கு அறை, கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அறைகள் போன்ற வசதிகள் உள்ளன. எனவே நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த போா் விதவையா் மற்றும் முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்கள் நிம்மதி இல்லத்தில் தங்குவதற்கு விருப்பம் இருந்தால் 91761-09333 என்ற கைபேசி எண் அல்லது நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.