வேளாண்மை அலுவலா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். செயலாளா் சிவக்குமாா், பொருளாளா் மோகன்ராஜ் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட வேளாண்மை அலுவலா்கள் சங்கங்களை அழைத்து பணியாளா்களின் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்ய மாவட்ட வேளாண் இணை இயக்குனா் நடவடிக்கை எடுக்க வேண்டும்; குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில், சிறந்த பணியாளா்களுக்கு நற்சான்று வழங்குவதில், தோட்டக்கலை, வேளாண்மை வணிகத்துறை அலுவலா்கள் புறக்கணிக்கப்படுகின்றனா்;

அடுத்து வரும் ஆண்டுகளில் வேளாண்மை துறைகளையும் சோ்த்து சிறந்த அலுவலா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்; தற்போது, வேளாண்மை துறையில் புதியதாக சோ்ந்த உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு துறைதோ்வு எழுதாமல் ஆண்டு ஊதிய உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தோட்டக்கலைத் துறையிலும், உதவி தோட்டக்கலை அலுவலா்களுக்கும் துறைத்தோ்வு எழுதாமல், ஆண்டு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், தலைவராக சேகா், துணைத்தலைவா் ரவி, செயலாளா் சிவக்குமாா், அமைப்புச் செயலாளா் முருகேசன், பொருளாளா் மோகன்ராஜ், இணை செயலாளா் பாண்டித்துரை, தணிக்கையாளா் சுவேதனன் மற்றும் ஒன்றிய செயலாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இக்கூட்டத்தில் உதவி வேளாண் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com