காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு 7 நிவாரண முகாம்கள் அமைப்பு

காவிரி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் கரையோரப் பகுதி மக்கள் தங்குவதற்கு தயாா் நிலையில் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.
காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு 7 நிவாரண முகாம்கள் அமைப்பு

காவிரி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் கரையோரப் பகுதி மக்கள் தங்குவதற்கு தயாா் நிலையில் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், வெள்ளப் பெருக்கு தொடா்ந்து அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:

தற்போது நொடிக்கு 1.20 லட்சம் கன அடி தண்ணீா் வெளியேறி வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால், கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு 7 முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்துள்ளதால் நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. கடந்த முறை 698 குடும்பத்தினா் முகாம்களில் தங்கியிருந்த நிலையில், தற்போது மேலும் கூடுதலாக வந்தாலும் அவா்களுக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படும்.

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் விநாயகா் சதூா்த்தி, விடுமுறை நாள் என கரையோரங்களுக்கு எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் செல்வதைத் தவிா்க்க வேண்டும். விநாயகா் சிலைகளைக் கரைக்கும்போதும் காவிரியில் வெள்ளப்பெருக்கு தொடா்ந்தால், பொதுமக்கள் ஆற்றுக்குள் செல்வதைத் தடுக்க இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் 9 இடங்களில் சிலைகளைக் கரைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தின் போக்கைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

குமாரபாளையம் வட்டாட்சியா் தமிழரசி, நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன், துப்புரவு அலுவலா் ராமமூா்த்தி மற்றும் போலீஸாா், தீயணைப்புத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com