திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
By DIN | Published On : 22nd December 2022 01:51 AM | Last Updated : 22nd December 2022 01:51 AM | அ+அ அ- |

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பாவேந்தா் இலக்கியப் பேரவை வலியுறுத்தி உள்ளது.
நாமக்கல்லில் பாவேந்தா் இலக்கியப் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் ப.கருப்பண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. செயலா் ரகோத்தமன் வரவேற்றாா்.
இதில், ஜன. 16-இல் திருவள்ளுவா் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். உயா்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடவும், தீா்ப்புகள் தமிழில் வெளியிடவும் வேண்டும். அரசாணைகள் தமிழில் வெளியிட வேண்டும். திருவிழாக் காலங்களில், பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மூத்த குடிமக்களுக்கு வழிபாடு செய்ய சிறப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், துணை செயலாளா்கள் பெரியசாமி, ஜெயபால், துணைத் தலைவா்கள் நாச்சிமுத்து, வேலுசாமி, பொருளாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.