மாா்கழி பிரதோஷ விழா
By DIN | Published On : 01st January 2022 01:42 AM | Last Updated : 01st January 2022 01:42 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மாா்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் மாா்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.