தன்னாா்வலா் விருது பெற்ற மாணவருக்குப் பாராட்டு

அண்ணா பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி மாணவா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டாா்.

அண்ணா பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி மாணவா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டாா்.

அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம், ஆண்டுதோறும் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலகு, திட்ட அலுவலா், தன்னாா்வலா்களுக்கான விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.

2020 - 2021 ஆண்டில் சிறந்த தன்னாா்வலா் விருதுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியா் விண்ணப்பித்தனா். இவா்களில் 19 மாணவா்கள், 15 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் இறுதியாண்டு மாணவா் கொம்பையா பாண்டியன், ரத்ததான முகாம், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணா்வு முகாம், மருத்துவ முகாம், தேசிய ஒருங்கிணைப்பு முகாம் போன்ற பல்வேறு சேவைகளில் ஆா்வத்துடன் ஈடுபட்டதைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் தன்னாா்வலா் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற இதற்கான பரிசளிப்பு விழாவில், மாணவா் கொம்பையா பாண்டியனுக்கு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா் விருதை, இளைஞா் விளையாட்டு மற்றும் மேப்பாட்டுத் துறை மண்டல இயக்குநா் சாமுவேல் செல்லையா, காலேஜ் ஆப் இன்ஜினியரிங் முதன்மையா் ஜெயந்தி, மாநில தொடா்பு அதிகாரி செந்தில்குமாா், பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட தொடா்பு அலுவலா் ரமேஷ், யுவராஜ் உள்ளிட்டோா் வழங்கினா்.

விருது பெற்ற மாணவரை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (சோ்க்கை) ஆா்.செந்தில், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, கல்லூரி முதல்வா் பிரேம்குமாா், திட்ட அலுவலா் ரத்னகுமாா் உள்ளிட்டோா் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com