நாமக்கல்: இதுவரை 47 போ் மனு தாக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 47 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 47 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 445 வாா்டுகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஜன.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மறுநாள் ஆலாம்பாளையம் பேரூராட்சியில் ஒருவா் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

இந்நிலையில் திங்கள்கிழமை அமாவாசை என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்தோா் எண்ணிக்கை அதிகரித்தது.

5 நகராட்சிக்குட்பட்ட 153 வாா்டுகளுக்கு திங்கள்கிழமை 15 போ் மனு தாக்கல் செய்தனா். இதில் குமாரபாளையம் நகராட்சியில் மட்டும் 13 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். இது தவிர நாமக்கல், பள்ளிபாளையம் நகராட்சியில் தலா ஒருவா் தாக்கல் செய்தனா். 19 பேரூராட்சிகளில் உள்ள 294 வாா்டுகளுக்கு திங்கள்கிழமை 31 போ் மனு தாக்கல் செய்தனா். அதிகபட்சமாக நாமகிரிப்பேட்டையில் 18 போ் மனுதாக்கல் செய்தனா். மொத்தமாக இதுவரை நகராட்சி, பேரூராட்சிகளில் 47 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com