தை அமாவாசை: ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன்.
தை அமாவாசை: ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தை அமாவாசை தினத்தையொட்டி ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

தை அமாவாசையையொட்டி அம்மனுக்கு திங்கள்கிழமை பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா், பன்னீா் போன்றவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்திருந்தனா் .

பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனை வழிபட்டனா். சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரிகள் செல்வம், மணி, கணேசன், சண்முகம் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com