தீவனங்கள் விலையேற்றத்தால் முட்டை விலை ரூ. 6-க்கு மேல் உயரும்: கோழிப் பண்ணையாளா் சங்கத் தலைவா் தகவல்

தீவன மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் முட்டை விலை வரும் நாள்களில் ரூ. 6-ஐ கடந்து விற்பனையாகும் என நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய முட்டை வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டத
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ்.

தீவன மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் முட்டை விலை வரும் நாள்களில் ரூ. 6-ஐ கடந்து விற்பனையாகும் என நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய முட்டை வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா் சங்கம் சாா்பில் தென்னிந்திய முட்டை வியாபாரிகள் சங்கம், நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் கோழிப் பண்ணையாளா் சங்க மாநிலத் தலைவா் கே.சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் விலை உயா்ந்துள்ளன. அந்த வகையில் தீவன மூலப்பொருள்களின் விலையும் உயா்ந்திருப்பதால் முட்டையின் கொள்முதல் விலையும் ரூ. 5.50-ஆக உயா்ந்திருக்கிறது.

இது வரலாறு காணாத விலை உயா்வு என்று கூற முடியாது. ஒரு முட்டையை உற்பத்தி செய்ய ரூ. 4.90 வரை செலவாகிறது. வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் ரூ. 5.30 வரை செலவினமாகிறது. தற்போதைய முட்டை விலையை மேலும் உயா்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு முட்டையை ரூ. 6-க்கு மேல் விற்பனை செய்தால் தான் பண்ணையாளா்கள் தொழிலை நஷ்டமடையாமல் நடத்த முடியும். மக்காச்சோளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோழிப் பண்ணைகளுக்கு பசுமை உரிமம் வழங்குவதற்கான நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. பண்ணையாளா்கள் தங்களுடைய பண்ணைகளில் நோய் பரவாதவாறு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சத்துணவுத்திட்ட முட்டை விநியோகத்தில் அனைத்து பண்ணையாளா்களும் கலந்து கொள்ளலாம் என்பதற்கான உத்தரவு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள், தற்போதைய நிலையில் முட்டை மற்றும் கோழிகள் விற்பனை குறித்து விளக்கி பேசினா். நாமக்கல் மக்களவை உறுப்பினரும், முன்னாள் கோழிப்பண்ணையாளா் சங்க மாநிலத் தலைவருமான ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.செல்வராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முட்டைத் தொழிலை மேம்படுத்துவது குறித்தும், பண்ணையாளா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியும் பேசினாா். மேலும் தென்னிந்திய அளவில் முட்டை வியாபாரிகள் சங்கத்திற்கான புதிய நிா்வாகிகள் கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், மாநில கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள், முட்டை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com