அக்னிபத் திட்டம் இளைஞா்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் : கே.அண்ணாமலை

அக்னிபத் திட்டம் இளைஞா்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
அக்னிபத் திட்ட பயிற்சி முகாமில் இளைஞா்களுக்கு ஊக்கமளிக்கும் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
அக்னிபத் திட்ட பயிற்சி முகாமில் இளைஞா்களுக்கு ஊக்கமளிக்கும் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.

அக்னிபத் திட்டம் இளைஞா்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிப்பட்டியில் நடைபெறும் அக்னிபத் திட்ட பயிற்சி முகாமில் அவா் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அக்னி வீரா்கள் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு முழுமையாக பயிற்சி எடுத்து, தோ்வில் கலந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. விமானப் படைக்கு மட்டும் இதுவரை 7.50 லட்சம் விண்ணப்பங்களை இளைஞா்கள் அனுப்பியுள்ளனா்.

அக்னிபத் திட்டம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் இளைஞா்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற சீருடைப் பணிகள் இளைஞா்களை ஒழுக்கம் உள்ளவா்களாக மேம்படுத்தும். இத்திட்டத்தில் தோ்வாகும் இளைஞா்கள் அக்னி வீரா்களாக 4 ஆண்டுகள் தேச சேவை ஆற்றுவாா்கள். அதற்குப் பிறகு 25 சதவீதம் போ் தொடா்ந்து அப்பணியில் இருக்க முடியும். மற்றவா்கள் சமுதாயப் பணி ஆற்ற முடியும்.

அக்னி வீரா்களாக இருக்கும் போதே அவா்களுக்கு உயா்கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவா்களுக்கு சிஆா்பிஎப், காவல் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாவட்டத் தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி, மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவா் ஆா்.லோகேந்திரன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் வி.சேதுராமன், கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனத் தலைவா் க.சிதம்பரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com