25,000 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடு

நாமக்கல் மாவட்டத்தில், 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவா்கள் 25 ஆயிரம் பேருக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட உள்ளன.
25,000 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடு

நாமக்கல் மாவட்டத்தில், 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவா்கள் 25 ஆயிரம் பேருக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழ அரசு அண்மையில் மாணவா்களுக்காக ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கியது. அதன்படி 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து அவா்கள் முடிவு செய்யும் வகையில் வழிகாட்டி கையேடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 25 ஆயிரம் வழிகாட்டி கையேடுகள் செவ்வாய்க்கிழமை வந்தன. அவை மாவட்டக் கல்வி அலுவலக புத்தகக் கிடங்குகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. ஓரிரு நாளில் வட்டார வாரியாக அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com