திருச்செங்கோடு: ரூ.70 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏல விற்பனையில் 1600 மூட்டை மஞ்சள் ரூ .70 லட்சத்திற்கு விற்பனையானது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏல விற்பனையில் 1600 மூட்டை மஞ்சள் ரூ .70 லட்சத்திற்கு விற்பனையானது.

வேளாண் சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் விற்பனை ஏலத்தில் ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் விற்பனைக்கு வந்தது. மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா். ஏலம் மூலமாக ரூ. 70 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ . 7,102 முதல் ரூ. 8,662 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ. 6,802 முதல் ரூ. 7,609 வரை விலைபோனது. பனங்காளி ரகம் ரூ.10,412 முதல் ரூ. 14,012 வரை விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com