முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.90-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டைவிலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.90-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டைஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது தடையின்றி செல்வதாலும் முட்டை விலையை உயா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.90-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 118-ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com