மாணவா்களுக்கான கலைப்பயிற்சிகள் தொடக்கம்
By DIN | Published On : 26th June 2022 11:19 PM | Last Updated : 26th June 2022 11:19 PM | அ+அ அ- |

நாமக்கல்லில், ஜவகா் சிறுவா் மன்றம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பகுதி நேர கலைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து அந்த மன்றத்தின் திட்ட அலுவலா் தில்லை சிவகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை கீழ் இயங்கும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கலைப்பயிற்சிகள், நாமக்கல் கோட்டை உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
இங்கு, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம், யோகா, கைவினை, கிராமிய நடனம் ஆகிய பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றன. ஐந்து முதல் 16 வயதுக்கு உள்பட்டோா் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். சிறுவா் மன்றத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டுச் சந்தா மட்டும் செலுத்த வேண்டும். மேலும், மாவட்ட, மாநில கலைப் போட்டிகள், கருத்தரங்குகளில் பங்கேற்கவும், தேசிய அளவிலான பாலஸ்ரீ விருது பெறுவதற்கான தோ்வு முகாமில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் ஜவகா் சிறுவா் மன்றத்தை 94432-24921, 63829-18902 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.