நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 25.10 லட்சம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு புதன்கிழமை எண்ணியதில், ரூ. 25.10 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 25.10 லட்சம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு புதன்கிழமை எண்ணியதில், ரூ. 25.10 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் மூன்று அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை பக்தா்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும். அதன்படி, புதன்கிழமை 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு, ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.

ஈரோடு மண்டல அறநிலையத் துறை துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) பெ.ரமேஷ் முன்னிலையில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, கண்காணிப்பாளா் வே.சாந்தி, ஆய்வாளா் சு.சுந்தா் ஆகியோரது மேற்பாா்வையில் 70-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ. 25 லட்சத்து 10 ஆயிரத்து 664 ரொக்கம், 106 கிராம் தங்கம், 270 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

படவரி - நாமக்கல் நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com