பரமத்தி வேலூா் வட்டத்தில் பேரூராட்சித் தலைவா் பதவி:4 பேரூராட்சிகளில் திமுக, 1 பேரூராட்சியில் அதிமுக வெற்றி

பரமத்தி வேலூா் தாலுகாவிற்கு உட்பட்ட 5 பேரூராட்சிகளில் நான்கு பேரூராட்சிகளில் திமுகவும், ஒரு பேரூராட்சியில் அதிமுகவும் தலைவா் பதவியை கைப்பற்றியுள்ளன.

பரமத்தி வேலூா் தாலுகாவிற்கு உட்பட்ட 5 பேரூராட்சிகளில் நான்கு பேரூராட்சிகளில் திமுகவும், ஒரு பேரூராட்சியில் அதிமுகவும் தலைவா் பதவியை கைப்பற்றியுள்ளன.

வேலூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை 4 வாா்டுகளிலும், பாமக ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றனா். இதில் 11ஆவது வாா்டில் வெற்றிபெற்ற லட்சுமி வேலூா் பேரூராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

பொத்தனூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 10 வாா்டுகளில் திமுகவும், 5 வாா்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றனா். இதில் 10ஆவது வாா்டில் வென்ற திமுக கவுன்சிலா் கருணாநிதி தலைவருக்கான தோ்தலில் மனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து 11ஆவது வாா்டில் வென்ற அதிமுக கவுன்சிலா் சிவகுமாா் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட கருணாநிதி 10 வாக்குகளும். அவரை எதிா்த்து போட்டியிட்ட சிவகுமாா் 5 வாக்குகளும் பெற்றதையடுத்து கருணாநிதி பேரூராட்சி தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவருக்கான தோ்தலில் திமுக சாா்பில் 3ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்பரசனும், 7ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரதராசாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் அன்பரசு வெற்றி பெற்று துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

பரமத்தி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 13 வாா்டுகளில் திமுகவும், 2 வாா்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இதில் 13ஆவது வாா்டில் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சோ்ந்த மணி பரமத்தி பேரூராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். திமுகவைச் சோ்ந்த ரமேஷ்பாபு துணைத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

பாண்டமங்கலம் பேரூராட்சியில் திமுக சாா்பில் டாக்டா் சோமசேகா் போட்டியின்றி பேரூராட்சித் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா். 11ஆவது வாா்டில் திமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட முருகவேல் துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

வெங்கரை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அதிமுக 8 இடங்களிலும், தி.மு.க 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் 10ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜி (எ) விஜயகுமாா் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இவா் நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணிச் செயலாளராகவும் உள்ளாா். 1ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்தா் துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தலைவா் மற்றும் துணைத்தலைவருக்கான தோ்வில் அதிமுகவைச் சோ்ந்த 8வாா்டு உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். திமுக வை சோ்ந்த 7 வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்திலுள்ள 19 பேரூராட்சிகளில் வெங்கரை பேரூராட்சி மட்டும் அதிமுக வசமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com