நாட்டுக்கோழி வளா்ப்பு மாா்ச் 9-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் - மோகனூா் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை உணவியல் துறையில் பன்னாட்டு மேம்பாட்டுத்துறை நிதி உதவியுடன் நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி மாா்ச் 9 முதல் 11-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு 30 போ் வீதம் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள், அமைப்பு, கோழிகளுக்கு கலப்புத் தீவனம் தயாரித்தல், தரமறிதல், குடிநீா் மேலாண்மை, நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள், மூலிகை மருத்துவ முறைகள், குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல், நாட்டுக்கோழி பண்ணைகளில் ஏற்படும் பிரச்னைகளும் அதற்கான தீா்வுகளும், பண்ணைப் பொருளாதாரம், வங்கிக் கடனுதவி மற்றும் கோழி வளா்ப்புக்கான மானியத் திட்டங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் பேராசிரியா்கள் மற்றும் மற்றும் கோழியின நிபுணா்கள் பயிற்சி வழங்குகின்றனா்.

பயிற்சியாளா்களுக்கு கையேடு, தேநீா், மதிய உணவு மற்றும் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் மூன்று நாள்களும் கலந்து கொண்டவா்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோா் 04286-266571, 291941 என்ற தொலைபேசி எண்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com