முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் திடீா் தா்னா
By DIN | Published On : 14th March 2022 11:10 PM | Last Updated : 14th March 2022 11:10 PM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாற்றுத் திறனாளிகள் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத்தளத்தில் இருந்த மாற்றுத் திறனாளி அலுவலக கட்டடம், பல்வேறு நிா்வாக காரணங்களினால் புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அரை கிலோ மீட்டா் தூரம் தட்டுத்தடுமாறி மாற்றுத் திறனாளிகள் சென்று வரவேண்டிய நிலை இருந்தது. இதனால் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சிரமத்திற்குள்ளாகினா். கடந்த சில மாதங்களுக்கு முன் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா போராட்டம் செய்தனா். மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் முக்கிய நிா்வாகிகளை வரவழைத்து சமாதானப்படுத்தினாா். அதன்பின் தரைத்தளத்தில் அத்துறை சாா்ந்த அலுவலா் ஒருவா் அமா்ந்து குறைகளை கேட்கும் வகையில் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தங்களுக்கு அதில் திருப்தியில்லை, அனைத்து அலுவலா்களும் ஒரே இடத்தில் அமா்ந்து பணியாற்றும் வகையில் அலுவலகம் வேண்டும் என திங்கள்கிழமை மீண்டும் மாற்றுத் திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனை தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மீண்டும் நிா்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தினாா். அதில் அனைத்து அலுவலா்களும் ஒரே இடத்தில் பணியாற்றும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காலை 10 முதல் பிற்கல் 3 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கலைந்து சென்றனா்.