திருச்செங்கோடு ஓங்காளியம்மன் திருவீதி உலா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன ஓங் காளியம்மன் கோயில் மாசிக் குண்டம் திருவிழாவில் உற்சவா் திருவீதி உலா அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு ஓங்காளியம்மன் திருவீதி உலா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன ஓங் காளியம்மன் கோயில் மாசிக் குண்டம் திருவிழாவில் உற்சவா் திருவீதி உலா அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா கடந்த 25ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தீா்த்த குடம் எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், அம்மன் வேடம் தரித்தல் போன்ற நிகழ்ச்சி மற்றும் நோ்த்திக்கடன் நிறைவேற்றத்திற்குப் பிறகு விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வரிசையாக தீ மிதித்தனா். 60 அடி நீள குண்டத்தில் ஆண்கள் நீண்ட வரிசையிலும் கைக்குழந்தைகளுடன் பெண்கள் வரிசையாகவும் நிதானமாகவும் குண்டம் இறங்கினாா்கள். நிகழ்ச்சியை தொடா்ந்து பொங்கல் வைத்து அம்மனை பக்தா்கள் வழிபட்டனா். இறுதி நாளன்று ஓங்காளியம்மன் திருவீதி உலா சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com