முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
இன்று 25-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 19th March 2022 12:27 AM | Last Updated : 19th March 2022 12:27 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் 25-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட 15,15,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், முதல் தவணை 12,36,841 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 9,24,130 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 24 கட்ட தடுப்பூசி முகாம்கள் மூலம் 7,41,221 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 25-ஆம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சுமாா் 4 ஆயிரம் ஊழியா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்களும், இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.