முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நாமக்கல்லில் விவசாயக் கண்காட்சி
By DIN | Published On : 19th March 2022 12:25 AM | Last Updated : 19th March 2022 12:25 AM | அ+அ அ- |

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கொங்கு வேளாளா் திருமண மண்டபத்தில் விவசாய, கோழிப்பண்ணைகள் சாா்ந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இங்கு 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு விவசாயம் சாா்ந்த அரங்குகள், அரசுத் துறை அரங்குகள், வாகன அரங்குகள் இடம் பெற்றுள்ளன. புதிய வேளாண் கருவிகள், இயந்திரங்கள், தீமையில்லா உணவு உற்பத்திக்கு வழிவகுக்கும் இயற்கை இடுபொருள்கள், உணவு வகைகள், தானிய வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கட்டணமின்றி இலவசமாக கண்காட்சியைப் பாா்வையிடலாம் என விவசாயக் கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.