இளையபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா:ஏப். 10இல் மலையில் கொடியேற்றம்

திருச்செங்கோடு அருகேயுள்ள இறையமங்கலம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

திருச்செங்கோடு அருகேயுள்ள இறையமங்கலம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. இவ்வாண்டு இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலையில் கொடியேற்றம் நடக்கிறது. இளையபெருமாள் சுவாமி பரிவார தெய்வங்களுடன் நகா் வலம் வருகிறாா். 11ஆம் தேதி திங்கள்கிழமை சுவாமி மலா்ப்பல்லக்கில் கிரிவலம் வருகிறாா். கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு சுவாமி ஹனுமந்த வாகனத்தில் கிரிவலம் வருகிறாா்.13ஆம் தேதி சுவாமி கருட வாகனத்தில் ஊா்வலம் வருகிறாா்.14ஆம் தேதி பூந்தேரோட்டம் மலையைச் சுற்றி நடக்கிறது. தோ்க்கலசம் வைத்தல், திருக்கல்யாண வைபவம், மாங்கல்யதாரணம் நடக்கிறது. இரவு கும்மியாட்டம் நடக்கிறது.

15ஆம் தேதி சுவாமி குதிரை வாகனத்தில் கிரிவலம் வருகிறாா். பாரிவேட்டை நடக்கிறது.16ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறாா். ஆஞ்சநேயரும் தனது தேருக்கு எழுந்தருள்கிறாா். அன்று 3.45 மணிக்கு திருத்தோ்கள் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது.

17ஆம் தேதி இரவு மோகினி அவதாரம், பின்ன மரத்தில் சுவாமி புறப்பாடு, கிராமிய தெருக்கூத்து, சத்தாபரணம், வாண வேடிக்கை ஆகியவை நடக்கின்றன.18ஆம் தேதி ஊஞ்சல் சேவைக்குப்பின் பரிவார தெய்வங்களுடன் சுவாமி திருமலைக்கு எழுந்தருள்கிறாா். பக்தா்களுக்கு சிறப்பு நாட்களில் அன்னதானம் நடக்கும் என கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com