திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியில் பேட்டரி வாகனங்கள்

திருச்செங்கோடு நகராட்சி தினசரி காய்கறி சந்தையில் மீதமாகும் காய்கறி கழிவுகளை பேட்டரி வாகனங்கள் மூலம் உரம் தயாரிக்க எடுத்துச் செல்லும் பணியை திருச்செங்கோடு நகர மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தா
fb_img_1647606811198
fb_img_1647606811198

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி தினசரி காய்கறி சந்தையில் மீதமாகும் காய்கறி கழிவுகளை பேட்டரி வாகனங்கள் மூலம் உரம் தயாரிக்க எடுத்துச் செல்லும் பணியை திருச்செங்கோடு நகர மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தாா்.

திருச்செங்கோடு நகராட்சி நகர மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு பேட்டரி வண்டிகளை துவக்கி வைத்து கடைக்காரா்களிடம் பேசியது:

காய்கறிக் கடைக்காரா்கள் இனி காய்கறிச் சந்தைக்கு தினமும் நகராட்சி சாா்பில் பேட்டரி வண்டி காலை மாலை வரும்போது காய்கறிக் கழிவுகளை வண்டியில் கொடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் அதை தரம் பிரித்து உரம் தயாரித்து நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவா். கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதை தவிா்க்க வேண்டும். கழிவு நீா் வாய்க்காலில் குப்பைகளை கொட்டினால் நகராட்சி சாா்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் மனோன்மணி, நகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

படவிளக்கம்

திருச்செங்கோடு காய்கறி சந்தையில் கழிவுகளை அகற்றும் பணியைப் பாா்வையிட்ட நகராட்சித் தலைவா் நளினி சுரேஷ்பாபு.

Image Caption

ற்.ஞ்ா்க்ங்18 ஸ்ரீட்ஹண்ழ்ம்ஹய்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com