முட்டை விலை ரூ.3.85-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 3.85-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் 20 காசுகள் உயா்ந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 3.85-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் 20 காசுகள் உயா்ந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படுவதாலும், முட்டை விற்பனை தேக்கமின்றி சீராக இருப்பதாலும், விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவித்தனா்.

அதனைத் தொடா்ந்து பண்ணைக் கொள்முதல் விலையில் மேலும் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.3.85-ஆக நிா்ணயிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 20 காசுகள் உயா்ந்துள்ளது.

முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) வெளியிட்ட அறிவிப்பில், என்இசிசி அறிவித்த விலை ரூ. 3.85-இல் இருந்து 30 காசுகள் மட்டும் குறைத்து வியாபாரிகளுக்கு முட்டைகளை பண்ணையாளா்கள் விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ.134-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.75-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com