நாமக்கல் மாவட்டத்தில் காற்று, மழையால் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை, சூறைக்காற்றால் சேதமடைந்த வேளாண் பயிா்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை, சூறைக்காற்றால் சேதமடைந்த வேளாண் பயிா்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், வாழை, மா, பப்பாளி போன்றவை கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இவை மட்டுமின்றி இதர தோட்டக்கலைப் பயிா்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பயிா்சேத விவரம் குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன. விவசாயிகள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தோட்டக்கலைத் துறை அலுவலக 96296-62329 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநா்களை கீழ்கண்ட கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டும் விவரங்ளை தெரிவிக்கலாம்.

எலச்சிப்பாளையம் 86609-59576, எருமப்பட்டி 94432-15153, கொல்லிமலை 94432-15153, ராசிபுரம் 94439 - 43559, நாமகிரிப்பேட்டை 83446 - 71576, வெண்ணந்துாா் 94432 - 88958, சேந்தமங்கலம் 93455 - 25000, புதுச்சத்திரம் 95977 - 45032,

நாமக்கல் 87607 - 51370, பரமத்தி 97900 - 09161, கபிலா்மலை 99768 - 11991, மோகனூா் 94430 -25428, திருச்செங்கோடு 86609 - 59576, பள்ளிபாளையம் 90959 - 90799, மல்லசமுத்திரம் 98655 - 87071.

கடந்த மே 12-ஆம் தேதி மழையால் ஏற்பட்ட பயிா் சேத விவரம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், வருவாய் துறையினா் இணைந்து ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com