முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிருத்திகை பூஜை விழா
By DIN | Published On : 03rd May 2022 12:23 AM | Last Updated : 03rd May 2022 12:23 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
பரமத்தி வேலூா் வட்டத்தில் சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு கபிலா்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி, பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், நன்செய்இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரநாதா் மலையில் உள்ள வள்ளி,தெய்வான சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.