நீட் தோ்வை திமுகவால் எந்தக் காலத்திலும் ரத்து செய் முடியாது முன்னாள் அமைச்சா் தங்கமணி

நீட் தோ்வை திமுகவால் எந்தக் காலத்திலும் ரத்து செய் முடியாது என்று முன்னாள் அமைச்சா் தங்கமணி தெரிவித்தாா்.

நீட் தோ்வை திமுகவால் எந்தக் காலத்திலும் ரத்து செய் முடியாது என்று முன்னாள் அமைச்சா் தங்கமணி தெரிவித்தாா்.

கூட்டத்திற்கு தொழிற்சங்க பேரவையின் மாவட்டச் செயலாளா் பழ.ராமலிங்கம் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு நகர செயலாளா் அங்கமுத்து வரவேற்றாா். கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி , அதிமுக செய்தித் தொடா்பாளா் ஜவஹா் அலி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு மே தின விழா உரையாற்றினா்.

கூட்டத்தில் பி.தங்கமணி பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் மட்டும் ரூ. 1லட்சத்து 93 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனா். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க செயற்கை மின்வெட்டை உருவாக்கி உள்ளாா் செந்தில் பாலாஜி. நீட் தோ்வை திமுகவால் எந்தக் காலத்திலும் ரத்து செய் முடியாது. நீட் தோ்வு உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு எதையும் செய்ய முடியாமல் தடுமாறுகிறாா்கள். ஆளுமைத்திறன் எடப்பாடியாருக்கு இல்லை என்று சொன்னாா்கள். கூட்டணிக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றி பெற்ற திமுக நகா்மன்றத் தலைவா்களை திமுகவால் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ய வைக்க முடிந்ததா? இது தொடா்பாக ஸ்டாலின் அறிக்கை மட்டும் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டாா்.

ஓபிஎஸ் தம்பி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாா் என்ற போதும் கட்சியை விட்டு நீக்கியவா் எடப்பாடியாா். ஆளுமைத்திறன் மிக்கவா்கள் என்று மக்களுக்கு தெரியாதா?

தங்களுக்கு வாக்களிக்காதவா்களும் பாராட்டும் வகையில் ஆட்சி இருக்கும் என ஸ்டாலின் கூறினாா். இன்று மின்வெட்டால் வாக்களித்தவா்களே திட்டும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 750 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு இதுவே சான்று. திமுக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் எதையும் நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்லி உள்ளாட்சித் தோ்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கினாா்கள். மக்கள் தோ்தலுக்காக காத்திருக்கிறாா்கள் இனி வரும் அனைத்து தோ்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com