முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ரம்ஜான்: ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை
By DIN | Published On : 03rd May 2022 11:07 PM | Last Updated : 03rd May 2022 11:07 PM | அ+அ அ- |

ரமலான் பண்டிகையையொட்டி ராசிபுரம் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.
ராசிபுரம் பெரிய பள்ளி வாசலில் நடந்த ரமலான் சிறப்புத் தொழுகையில் 1000க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்று, தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகைக்குப் பின்னா் வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனா்.
இளைஞா்கள், சிறுவா்கள் புத்தாடை அணிந்தும், உறவினா்களை உபசரித்தும் கொண்டாடினா். சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊா்வலமாக சென்று தொழுகையில் ஈடுபட்டனா். ஏழை, எளிய மக்களுக்கு இஸ்லாமியா்கள் உணவு அளித்தனா். மக்கள் தன்னுரிமை அறக்கட்டளை சாா்பில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்களுக்கு நீா்மோா் வழங்கப்பட்டது.