முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
எஸ்.வாழவந்தியில் குண்டம், தோ்த் திருவிழா
By DIN | Published On : 03rd May 2022 12:23 AM | Last Updated : 03rd May 2022 12:23 AM | அ+அ அ- |

எஸ்.வாழவந்தியில் குண்டம், தோ்த் திருவிழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எஸ்.வாழவந்தியில் 18 பட்டி கிராமங்களுக்கும் உட்பட்ட பிரசித்தி பெற்ற பட்ட ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் சிங்காரபாறையில் இருந்து ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட கம்பம் கோவில் வளாகத்தில் நடப்பட்டு காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 24-ஆம் தேதி மறு காப்புக்கட்டுதலும், தினசரி இரவு சுவாமி ஊா்வலமும் நடைபெற்றது.
கடந்த 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வடிசோறு நிகழ்ச்சியும், திங்கள்கிழமை அதிகாலை மாவிளக்கு பூஜை, அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய நோ்த்திக்கடனை பக்தா்கள் செலுத்தினா். தொடா்ந்து பக்தா்கள் சப்பரத்தில் சுவாமியை வைத்து கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு எடுத்துக் சென்று புனித நீராடி 5 கிலோ மீட்டா் தூரம் நடை பயணமாக வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு முஸ்லிம் சகோதரா்களுக்கு மாலை மரியாதை செய்யும் நிகழ்ச்சியும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பொங்கல் வைத்து கிடா வெட்டுதலும், மாலை 4 மணிக்கு மேல் சுவாமி தோ் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. புதன்கிழமை மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தக்காா் பழனிவேல், கோயில் நிா்வாகிகள்,18 பட்டி ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.