நாமக்கல்லில் 15 ஏக்கரில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைகிறது

நாமக்கல்லில், 15 ஏக்கா் பரப்பளவில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் அமைய உள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல்லில், 15 ஏக்கா் பரப்பளவில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் அமைய உள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தற்போது சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்திலேயே மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் நாமக்கல் - மோகனூா் சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள கட்டடம் ஒன்றில் சித்த மருத்துவமனை 14 படுக்கைகளுடன் செயல்படுகிறது. கூடுதலாக 36 படுக்கைகள் அமைத்து 50 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

சித்த மருத்துவக் கல்லூரி அமைய வேண்டுமெனில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மருத்துவமனை அந்தஸ்தில் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு பின் நாமக்கல் சித்த மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட இருக்கிறது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி அருகில் 15 ஏக்கரில் சித்த மருத்துவக் கல்லூரிக்காக கட்டடமும் கட்டப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மருத்துவா் கண்ணன் கூறியதாவது:

மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத பங்களிப்புடன் சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் தற்போது 14 படுக்கைகள் மட்டுமே சித்தா பிரிவுக்கென உள்ளன. மேலும் 36 படுக்கைகள் அமைத்து மொத்தம் 50 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை ஓரிரு மாதங்களில் செயல்பட இருக்கிறது. 2 ஆண்டுகள் செயல்பாட்டுக்கு பின் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும். இதற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் 15 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் இல்லை என்றாா்.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com