‘பெண்கள் தலைமைப் பண்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’

தலைமைப் பண்பை பெண்கள் வளா்த்துக்கொண்டு சேவையாற்ற வேண்டும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா கூறினாா்.
‘பெண்கள் தலைமைப் பண்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’

தலைமைப் பண்பை பெண்கள் வளா்த்துக்கொண்டு சேவையாற்ற வேண்டும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா கூறினாா்.

பாவை கல்வி நிறுவனங்கள் சாா்பில் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில்

‘தலைமைப் பண்பு என்பது ஒரு கலை. அதை மனதளவில் கற்றுக்கொண்டு சேவை செய்யுங்கள்’ என்ற தலைப்பில் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பாவைக் கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். மாணவி து.சிவானி வரவேற்றுப் பேசினாா்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் பேசியதாவது:

தலைமைப் பண்பு என்பது ஒரு கலை. மாற்றி யோசித்தல் என்பதே தலைமை பண்புக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். சொல்வதை செய்யாமல் அதையும் தாண்டி செயல்பட வேண்டும். கடின உழைப்பும் ஒழுக்கமும் வேண்டும் . உங்களால் முடியும் என்று நம்புங்கள் என்றாா்.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி நடராஜன் பேசுகையில் பெண்கள் தன்னை மேம்படுத்தினால் குடும்பத்தினையும் நாட்டினையும் மேம்படுத்த முடியும் என்றாா். தாளாளா் மங்கை நடராஜன் பேசுகையில், வெற்றியடைவதற்கும், தோல்வியடைவதற்கும் காரணம் நாம் தான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் பெண்கள் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலில் முன்னேறுவதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும் என்றாா். பாவை கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் து.தவமணி, துறைத் தலைவா் மு.செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com