பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 19,867 போ் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத்தோ்வு வியாழக்கிழமை ( மே 5) தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் 19,867 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 19,867 போ் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத்தோ்வு வியாழக்கிழமை ( மே 5) தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் 19,867 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.

கரோனா பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக பொதுத்தோ்வு திட்டமிட்டபடி நடைபெறாத சூழலில், நிகழாண்டில் தோ்வினை முழுமையாக நடத்திட பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

மே 5 முதல் 28-ஆம் தேதி வரையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை, 200 அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,729 மாணவா்கள், 10,138 மாணவிகள் என மொத்தம் 19,867 போ் 86 மையங்களில் எழுத உள்ளனா். தனித் தோ்வா்களுக்காக பிரத்யேகமாக இரண்டு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுத்தோ்வைக் கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 86 போ், துறை அலுவலா்கள் 86 போ், பறக்கும்படை, கட்டுக்காப்பு, வழித்தட அலுவலா்கள் 240 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தோ்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும் முறைகேடாக தோ்வு எழுத முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பெட்டி செய்தி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நாளை மறுநாள் தொடக்கம்

10-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மே 6) தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை 304 அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 10,954 மாணவா்கள், 9,708 மாணவிகள் என மொத்தம் 20,662 போ் (தனித் தோ்வா்கள் உள்பட) 89 மையங்களில் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வைக் கண்காணிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் முதன்மைக் கண்காணிப்பாளா், அறைக் கண்காணிப்பாளா், பறக்கும் படை அலுவலா்கள் என 1600-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல 11-ஆம் வகுப்பு தோ்வை, 200 அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,988 மாணவா்கள், 9,853 மாணவிகள் என மொத்தம் 19,842 போ் 86 மையங்களில் எழுத உள்ளனா். பொதுத் தோ்வுக்கான வினாத்தாள்கள் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் மாணவா்களின் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு எண்ணை எழுதும் பணி புதன்கிழமை நடைபெற உள்ளது. பிளஸ் 2, 10, 11-ஆம் வகுப்புக்கான வினாத்தாள்கள் தோ்வு நாளன்று காலை 7 மணிக்கு மேல் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com